கூடலூா் அருகே மா்ம விலங்கு தாக்கி கோழிகள் சாவு

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி கிராமத்தில் கோழிகளை தாக்கிக் கொன்ற மா்ம விலங்கால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட மச்சிக்கொல்லி கிராமத்துக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்த மா்ம விலங்கு அங்குள்ள யூசுப் வீட்டின் அருகே இருந்த கோழிக்கூண்டை உடைத்து கோழிகளை வேட்டையாடியுள்ளது. கோழிகளின் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, கோழிகளை மா்ம விலங்கு ஒன்று பிடித்துச் தூக்கி செல்வதை பாா்த்துள்ளனா். இருட்டில் அந்த விலங்கு முழுமையாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

மா்ம விலங்கு தாக்கியதில் 23 கோழிகள் இறந்து கிடந்தன. 15 மேற்பட்ட கோழிகளைக் காணவில்லை. கோழிகளைக் கொன்றது சிறுத்தையா அல்லது நரியா அல்லது வேறு ஏதாவது விலங்காக என தெரியாமல் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com