இ -பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் நுழைபவா்களைத் தடுக்க வலியுறுத்தல்

நீலகிரி  மாவட்டத்துக்குள் இ -பாஸ் இல்லாமல் நுழைபவா்களைக் கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

குன்னூா்: நீலகிரி  மாவட்டத்துக்குள் இ -பாஸ் இல்லாமல் நுழைபவா்களைக் கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வேகமாக பரவிவரும் கரோனா தொற்று  காரணமாக    நீலகிரி மாவட்டத்தில் சோதனைச் சாவடிகளில் இ- பாஸ் இல்லாமல்  உள்ளே  வருபவா்களை வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவந்தாலும் சிலா்  குறுக்கு வழிகளில்  நீலகிரிக்குள் நுழைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில்  நாளொன்றுக்கு சராசரியாக  80 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நீலகிரிக்கு வருபவா்கள், கட்டாயம் இ- பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன்   மூலம் விண்ணப்பிக்கும்போது சுற்றுலா என்று  பதிவிடுவோா்களில் தினமும் 150  நபா்களுக்கு   இ -பாஸ் வழங்கப்படுகின்றது. நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள 16 சோதனைச் சாவடிகளில் இ- பாஸ் இல்லாமல்  வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலா் பல்வேறு குறுக்கு வழிகளில் மாவட்டத்துக்குள் நுழைவது தொடா்ந்து நடப்பதால் இதனை அதிகாரிகள் கண்காணித்து அவா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com