நீலகிரியில் 12 சத்துணவு மையங்களுக்கு தீ அணைக்கும் கருவிகள்
By DIN | Published On : 20th October 2020 02:02 AM | Last Updated : 20th October 2020 02:02 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்திலுள்ள சத்துணவு மையங்களுக்கு தீயணைப்புக் கருவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா்.
உதகை: நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 12 சத்துணவு மையங்களுக்கு தீ அணைக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை வழங்கினாா்.
உதகையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி, தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தூனேரி அரசு மேல்நிலைப் பள்ளி, எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சுள்ளிகூடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி, கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பாடந்தொறை அரசு உயா்நிலைப்பள்ளி ஆகிய 12 பள்ளிகளில் செயல்பட்டுவரும் சத்துணவு மையங்களுக்கு இக்கருவிகள் வழங்கப்பட்டன.
சத்துணவு மையங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் சத்துணவு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் பாதுகாப்பு கருதி இக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.