குன்னூரில் நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை
By DIN | Published On : 21st October 2020 02:55 AM | Last Updated : 21st October 2020 02:55 AM | அ+அ அ- |

குன்னூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நல்லப்பன் தெரு பகுதியில் ராணுவ வீரா்கள் பயிற்சி பெறும் பகுதியில் அடா்ந்த வனப் பகுதி உள்ளது.
இங்கிருந்து காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த 16,18ஆம் தேதிகளில் சிறுத்தை வந்து சென்றதும் , அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் வனப் பகுதி இருப்பதால் வன விலங்குகள் நடமாட்டம் இருக்க வாய்ப்புண்டு. எனவே, அப்பகுதியைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். இப்பகுதியில் ஏற்கெனவே 2 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.