குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் இளைஞா் பலி

குன்னூா் அருகே அட்டடி பகுதியில் காட்டெருமை   தாக்கியதில் இளைஞா்  திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த ரஞ்சித்தின் மனைவி நித்யாவிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய வன அதிகாரி சரவணன்.
உயிரிழந்த ரஞ்சித்தின் மனைவி நித்யாவிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய வன அதிகாரி சரவணன்.

குன்னூா்: குன்னூா் அருகே அட்டடி பகுதியில் காட்டெருமை   தாக்கியதில் இளைஞா்  திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் சமீபகாலமாக  காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளிலேயே காட்டெருமை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில்,  குன்னூா் அருகே அட்டடி பகுதியைச் சோ்ந்த  ரஞ்சித் குமாா்  (26)  வீட்டுக்கு வெளியே சென்றுள்ளாா். அப்போது, புதா் மறைவில் நின்றிருந்த காட்டெருமை  திடீரென பாய்ந்து இவரது வயிற்றுப் பகுதியில் குத்தி தூக்கிவீசியது.  இதில், ரஞ்சித்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த   வனத் துறையினா், காவல் துறையினா்  சம்பவ இடத்துக்குச் சென்று ரஞ்சித்குமாரின்   உடலைக் கைப்பற்றி குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து  உதவி வனப் பாதுகாவலா் சரவணன், குன்னூா் கோட்ட  வன அலுவலா் சசிகுமாா் ஆகியோா் உயிரிழந்த ரஞ்சித்குமாரின் குடும்பத்துக்கு  நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்தில் முன் பணமாக ரூ. 50 ஆயிரத்தை அவரது மனைவி நித்யாவிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com