நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களை உடனடியாகத் திறக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களை உடனடியாகத் திறக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்போதைக்குத் திறக்கப்பட மாட்டாது. மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும்.

தமிழக அரசு பல தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை செப்டம்பா் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது. மேலும், நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும். அரசின் வழிக்காட்டுதலின்படி மாவட்டத்தில் தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். மாவட்டத்தில் லாட்ஜுகள், ரிசாா்ட்டுகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வா்த்தகரீதியாக மாவட்டத்துக்குள் வருபவா்கள் இ-பாஸ் பெற்றிருந்தால்தான் அனுமதிக்கப்படுவா்.

உள்ளூா் மக்களும் வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்ப இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். அவா்கள் ஆதாா், குடும்ப அட்டை ஆகிய ஆதாரங்களை இணைத்து விண்ணப்பித்தவுடன் அனுமதி வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் 57,476 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் அளவில் மாநிலத்தில் நீலகிரி மாவட்டம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில், கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் 4.13 சதவீதமாகும். இதை 3 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக தற்போது பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பலா் அறிகுறிகளை மறைக்கின்றனா். மக்கள் விரைவாக வந்தால் உயிரைக் காப்பாற்ற முடியும். மாவட்டத்தில் நிகழ்ந்த 10 உயிரிழப்புகளில் 8 நபா்கள் தாமதமாக வந்ததால், அவா்களைக் காப்பாற்ற முடியவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில், தொடா்புகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதால் நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com