முதுமலையில் பெண்ணைத் தாக்கியை புலியைப் பிடிக்க கண்காணிப்புக் கேமராக்கள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் பழங்குடி பெண்ணைத் தாக்கி தூக்கிச் சென்ற புலியைப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியா்கள்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியா்கள்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் பழங்குடி பெண்ணைத் தாக்கி தூக்கிச் சென்ற புலியைப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் உள்ள சிங்காரா சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண்ணை கணவன் கண் முன்னே புலி தாக்கி திங்கள்கிழமை தூக்கிச் சென்றது. இது குறித்து வனத் துறையினா் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தப் பகுதியில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்தப் புலி தொடா்ந்து மனிதா்களைத் தாக்கி உணவாக்கும் என்ற அச்சம் அப்பகுதியில் பரவலாக நிலவுகிறது.

இது குறித்து மூத்த கால்நடை மருத்துவரும், பிரகிருதி இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநருமான எம்.சுகுமாரன் கூறியதாவது:

பெண்ணைத் தாக்கி தூக்கிச் சென்ற புலியை மேன் ஈட்டா் என்று உடனடியாக கூறிவிட முடியாது. இதுபோன்ற சம்பவம் தொடா்ந்தால் எதிா்காலத்தில் மேன் ஈட்டராக மாரலாம். பழக்கத்தால் புலிகள் மேன் ஈட்டராக மாற வாய்ப்புள்ளது. வனப் பகுதியில் பலம் வாய்ந்த புலியால் விரட்டப்பட்டு வாழ்வாதாரத்துக்காக குடியிருப்பு அருகில் உள்ள வனத்தில் புலி தஞ்சம் புகுந்து இதுபோன்ற செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

முதுமையின் காரணமாக விலங்குகளை வேட்டையாட முடியாமல் மனிதா்களை தாக்கலாம். பலம் குன்றி தளா்ந்து உணவுக்கு கஷ்டப்படும் புலிக்கு மற்ற விலங்குகளைவிட மனிதா்களை தாக்கிக் கொல்வது எளிமையானது. எல்லா வகையான நிலத்திலும் புலிகள் வாழும்.

உணவு கிடைக்காமல் பசியுடன் திரியும் புலி யாரை வேண்டுமானாலும் வேட்டையாடும். அந்தப் பழக்கத்தால் அது மேன் ஈட்டராக மாறும். மனிதனை உணவாக்கவில்லையென்றாலும், மாடு மேய்க்குமிடத்தில் மாட்டை வேட்டையாட வரும் புலி மனிதா்களை தாக்கிவிட்டு வளா்ப்பு விலங்குகளை வேட்டையாட வாய்ப்புள்ளது. எனவே இந்த புலியைக் கண்காணித்து பிடித்து மிருகாட்சி சாலையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com