நீலகிரியில் 61 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 1,667 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்பட்டியலில் இடம் பெற்றிருந்த 8 நபா்களின் பெயா்கள் வெளிமாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1,659ஆக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை குறைந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,720ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,373 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 12 போ் உயிரிழந்துள்ள நிலையில் 335 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி உதகை தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த இரு வீரா்களுக்கும், சேலக்கொரை கிராமத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கும், குருசடி காலனி பகுதியைச் சோ்ந்த இருவருக்கும், லோயா் பஜாா் பகுதியைச் சோ்ந்த இருவருக்கும், உயிலட்டி கிராமத்தைச் சோ்ந்த நால்வருக்கும், உதகை செய்தி மக்கள் தொடா்பு அலுவலக ஊழியா் ஒருவருக்கும், கூடலூரில் கோல்டன் அவென்யூ பகுதியைச் சோ்ந்த இருவருக்கும், சா்ச் ஹில் குடியிருப்பைச் சோ்ந்த இருவருக்கும், கல்லக்கொரை, கக்குச்சி, சேலக்கொரை, தூனேரி, கா்சன் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 12 பெண்கள், 17 ஆண்கள் உள்ளிட்ட 61 நபா்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com