உதகை, குன்னூரில் பலத்த மழை
By DIN | Published On : 10th September 2020 07:03 AM | Last Updated : 10th September 2020 07:03 AM | அ+அ அ- |

பலத்த மழை காரணமாக உதகை மாா்க்கெட் சாலையில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன் கிழமை பலத்த மழை பெய்தது.
உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் வெயில் நிலவி வந்தது. மதியம் திடீரென பலத்த மழை பெய்யத் துவங்கியது. உதகையில் சேரிங்கிராஸ், பேருந்து நிலையம், மாா்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும், குன்னூரில் ஒட்டுப்பட்டரை, அருவங்காடு, பெட்போா்டு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக 6 மாதத்துக்குப் பின் நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இருப்பினும், குளுகுளு காலநிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.