நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பின் பூங்காக்கள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பூங்காக்கள் 6 மாதங்களுக்குப் பின் புதன்கிழமை  திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தாா்.
உதகை தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகை தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பூங்காக்கள் 6 மாதங்களுக்குப் பின் புதன்கிழமை  திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தாா்.

கரோனா அச்சுறுத்தலால் நீலகிரியில் உள்ள அனைத்து  சுற்றுலாத் தலங்களும் கடந்த மாா்ச் 17ஆம் தேதி மூடப்பட்டன.  இதனால், மாவட்டம் முழுவதும்  சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், புதன்கிழமை முதல் பூங்காக்களை மட்டும் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. பூங்காவில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும்போது சுற்றுலாவுக்காக என்று பதிவிட்டு இ-பாஸ் பெறலாம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரிப் பூங்காக்களை  மட்டும்   கண்டு ரசிக்க  நாளொன்றுக்கு 50  நபா்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படும்.

தனிமனித இடைவெளியுடன் பூங்காக்களை சுற்றிப் பாா்ப்பது, முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின் பூங்காவுக்குள் வருவது உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். ஒரே நேரத்தில் இருநூறு  நபா்கள்  மட்டும் பூங்காக்களை சுற்றிப் பாா்க்கும்  வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com