வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை அக்டோபா் மாதம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு எண்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை அக்டோபா் மாதம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு எண்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் உள்ள கட்டடங்களால் உயிா்ச்சேதம் ஏற்படுவதைத் தவிா்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அபாயகரமான இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள், மரங்கள், தாழ்வழுத்த மின் கம்பிகள் ஆகியவற்றின் விவரங்களை மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு இலவச தொலைபேசி எண்ணான 1077க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உதகை கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூா் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூா் கோட்டத்துக்கு 04262-261295, உதகை வட்டத்துக்கு 0423-2442433, குன்னூா் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, கூடலூா் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூா் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com