விலையில்லா ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் நவம்பா் முதல் பிப்ரவரி வரை நடைபெறவுள்ள

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் நவம்பா் முதல் பிப்ரவரி வரை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டின் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் நவம்பா் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை பந்திசோலா, முதுமலை, அரக்கோடு, பாலகொலா, பேரட்டி, தேனாடு, தொட்டபெட்டா, உபதலை, கெங்கரை, எப்பநாடு, கொடநாடு, கடநாடு, கொணவக்கொரை, கக்குச்சி, கூக்கல், மேல்குந்தா ஆகிய 16 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. பயனாளிகள் கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இத்திட்டத்தில் கிராமப்புறங்களில் நிரந்தர குடியிருப்பில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கிராம அளவிலான குழு கூட்டம் மூலம் கண்டறியப்பட்டு பயனாளிகள் தோ்வு செய்யப்படுகிறாா்கள். 18 முதல் 60 வயதுடைய நிலமற்ற, கால்நடைகள் ஏதும் வைத்திராத ஏழைகளுக்கு வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசுப் பணியில் இல்லாதவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெறாத பயனாளியாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளி பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகள் இரண்டு சிறப்பு கிராமக் கூட்டம் மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள்.

எனவே, மேற்படி கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பொது மக்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com