கூடலூரில் ரேஷன் கடைகளில் காத்துக்கிடந்த பொதுமக்கள்

கூடலூா் பகுதியில் புதிய பயோமெட்ரிக் இயந்திரங்கள் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.
மண்வயல் கிராமத்தில் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள்.
மண்வயல் கிராமத்தில் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள்.

கூடலூா்: கூடலூா் பகுதியில் புதிய பயோமெட்ரிக் இயந்திரங்கள் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் பகுதி மலைப்பிரேதசம் என்பதால் பெரும்பாலான கிராமங்களில் இணையம் வேலை செய்வதில்லை. அரசு ரேஷன் கடைகளில் புதிதாக பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் வேலை செய்யாததால் வாடிக்கையாளா்களின் கைரேகை பதிவாவதில்லை. இதனால், அன்றாடம் வேலையை விட்டுவிட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனா். அப்படி காத்துக் கிடக்கும் மக்களுக்குப் பொருள்களும் கிடைப்பதில்லை.

எனவே, அரசு மலைப் பிரதேச மக்களுக்கு ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் பொருள்கள் முறையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com