குன்னூரில் இடிந்து விழுந்தநியாய விலைக் கடை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ஓட்டுப்பட்டரை பகுதியில்  இயங்கிவந்த நியாய விலைக் கடை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.
குன்னூரில் இடிந்து விழுந்தநியாய விலைக் கடை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ஓட்டுப்பட்டரை பகுதியில்  இயங்கிவந்த நியாய விலைக் கடை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.

 குன்னூா் 27ஆவது வாா்டு ஓட்டுப்பட்டரையில் இயங்கி வந்த நியாயவிலைக் கடையில் சுமாா் 850 வாடிக்கையாளா்கள் உள்ளனா். இங்கு அரிசி , பருப்பு, சா்க்கரை, அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு உள்ள நிலையில் , கடையின் பின்பக்கச் சுவா் திடீரென ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. கடைக்குள் இருந்த ரேஷன் பொருள்கள் அருகில் இருந்த சுகாதார மையத்தின் மேல் விழுந்ததில், சுகாதார மையத்தின் சுவரும், ரேஷன் பொருள்களும் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்து நிக்கல்சன் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ரவி, ஊழியா்கள் ரேஷன் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com