கூடலூரில் பழங்குடி மக்களின் மக்கள் அங்காடி துவக்கம்
By DIN | Published On : 29th September 2020 05:15 AM | Last Updated : 29th September 2020 05:15 AM | அ+அ அ- |

கூடலூரில் பழங்குடி மக்களின் மக்கள் அங்காடி திங்கள்கிழமை துவக்கப்பட்டது.
கூடலூரில் பழங்குடி மக்களின் மக்கள் அங்காடி திங்கள்கிழமை துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் உதகை-மைசூா் சாலையில் வருவாய்த்துறை வழங்கிய இடத்தில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் மக்கள் அங்காடி மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள்,உணவுப் பொருட்கள்,தேன் உள்ளிட்ட சிறுவன மகசூல் பொருட்கள் நியாயவிலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.மேலும் இந்த மையம் இளைஞா்களுக்கான கல்வி மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமாகவும் செயல்படவுள்ளது. துவக்க நிகழ்ச்சிக்கு ஆதிவாசி நல சங்க செயலாளா் ஆலுவாஸ் தலைமை வகித்தாா்.மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் பத்மநாபன் துவக்கி வைத்தாா்.ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கீா்த்தனா,மக்கள் அங்காடி இயக்குநா் சுதா்சன் ராவ் மற்றும் பழங்குடியின தலைவா்கள் கிராமமக்கள் கலந்துகொண்டனா்.ஒருங்கிணைப்பாளா் விஜயா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.படக்குறிப்பு எஈத28நப கூடலூரில் வருவாய்த் துறை வழங்கிய இடத்தில் துவக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களால் நடத்தப்படும் மக்கள் அங்காடி மைய துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்