கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அக்டோபா் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு அக்டோபா் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு அக்டோபா் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகியிருந்தனா். செவ்வாய்க்கிழமை காலையில் விசாரணை தொடங்கிய நிலையில் நடுவட்டம் காவல் ஆய்வாளராக இருந்த சக்திவேல், அப்போது உதவி ஆய்வாளராக இருந்து தற்போது பணியிட மாற்றம் பெற்றுள்ள ராஜன் ஆகிய இருவரும் விசாரிக்கப்பட்டனா். அப்போது, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூடலூா் வழியாக கேரளத்துக்கு தப்பிச் செல்லும்போது அவா்களிடமிருந்து ஆற்றில் தூக்கி எறியப்பட்டிருந்த பிளாட்டினத்திலான யானை பொம்மை குறித்து அவா்கள் இருவரிடமும் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 5ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி வடமலை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com