முன்னாள் ராணுவ வீரா்களுக்குப் பயிற்சி

குன்னூா்  வெலிங்டன் ராணுவ மையத்தில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு முதல்முறையாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரா்கள்.

குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 141 முன்னாள்  ராணுவ வீரா்களுக்கு 6 வார காலம் மேம்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.   இதையடுத்து ராணுவ பயிற்சி மையத்தின் தலைவா்  கமாண்டன்ட் ராஜேஷ்வா் சிங்  சத்தியப் பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரிகேடியா், ராணுவ வீரா்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் கடினமான பயிற்சியை வெகுவாகப் பாராட்டினா்.

கரோனா பாதிப்பு காரணமாக சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com