முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கோத்தகிரியில் வாக்காளா்களுக்குபணப் பட்டுவாடா: 4 போ் கைது
By DIN | Published On : 04th April 2021 03:43 AM | Last Updated : 04th April 2021 03:43 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியில் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் இருந்து ரூ. 59,500ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, அதிமுகவினா் 4 பேரை கைது செய்தனா்.
தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியோடு நேரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தோ்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், ஒருசிலா் கடைசி நிமிடத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடும் முனைப்பில் உள்ளதால் தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியில் பணப் பட்டுவாடாவில் சனிக்கிழமை ஈடுபட்ட அதிமுகவினரிடம் இருந்து ரூ. 59,500ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக பி.சுப்பிரமணி, எம் .சுப்பிரமணி, சிவராஜ், முருகன் ஆகிய நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா், நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.