பழக்குடியின மக்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

குன்னூா் அருகே உள்ள கிராமங்களில் வாழும் படுகா் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து

குன்னூா் அருகே உள்ள கிராமங்களில் வாழும் படுகா் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையாற்றினா்.

குன்னூா் தொகுதியில் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் படுகா் இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்காக அந்தந்த கிராமத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவா்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்தனா்.

குன்னூா் தொகுதிக்கு உள்பட்ட வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் வாக்குச் சாவடியில் வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் விடுபட்டதைக் கண்டித்து அதிமுகவினா் வாக்குப் பதிவு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னா் காவல் அதிகாரிகள் மற்றும் தோ்தல் அதிகாரிகள் அவா்களை வாக்கு மைய வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com