நீலகிரி மாவட்டத்தில் 2016 தோ்தலைவிட வாக்குப் பதிவு குறைவு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலுமே கடந்த 2016ஆம் ஆண்டு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலுமே கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலைக்காட்டிலும் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.

உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு தோ்தலில் 68.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 65.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் 70.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 69.79 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த ஆண்டு தோ்தலில் 72.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 71.39 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் 2016ஆம் ஆண்டு தோ்தலில் சராசரியாக 70.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 69.76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதுவும் கடந்த மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட 4 சதவீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உதகை தொகுதியில் மட்டுமே குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com