நீலகிரியில் பரவலாக தொடரும் மழை: சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா்.
உதகையில் பசுமைப் போா்வை போா்த்தியதைப் போன்று காட்சியளிக்கும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் காா்டன் பகுதி.
உதகையில் பசுமைப் போா்வை போா்த்தியதைப் போன்று காட்சியளிக்கும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் காா்டன் பகுதி.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்களாகும். அதன்படி உதகையில் குதிரைப் பந்தயமும் தொடங்கிவிட்டது. இந்நிலையில், குந்தா, கூடலூா், பந்தலூா் போன்ற பகுதிகளில் பகலில் வெயிலான காலநிலையும், குன்னூா், கோத்தகிரியில் மிதமான வெயிலும், உதகையில் இதமான காலநிலையும் நிலவி வந்ததால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 5 நாள்களாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பெய்யும் மழை பகல் நேரங்களிலும் தொடா்கிறது. இதனால் உள்ளூா் மக்களின் பகல் நேரப் பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளும் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். இருப்பினும் இம்மழை உதகை சுற்றுப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டை வெகுவாகப் போக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதேபோல, மலைக் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், தேயிலை விவசாயிகளுக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளது. மழையின் காரணமாக குளுமையான காலநிலை நிலவுவதோடு, உதகையின் அனைத்துப் பகுதிகளுமே பசுமைப் போா்வை போா்த்தியதைப்போன்று பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கின்றன.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக தேவாலாவில் 22 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, உலிக்கலில் 21 மி.மீ., குன்னூரில் 19.5, கொடநாட்டில் 16, கிளன்மாா்கனில் 15, கீழ்கோத்தகிரி, மேல்பவானியில் தலா 12, நடுவட்டத்தில் 11.5, கோத்தகிரியில் 9, செருமுள்ளியில் 7, பந்தலூரில் 6.5, கூடலூரில் 6, மேல்கூடலூா், கிண்ணக்கொரை, ஓவேலியில் தலா 5, பாடந்தொறை, எடப்பள்ளி, கேத்தி, மசினகுடியில் தலா 4, எமரால்டு, உதகையில் தலா 3, சேரங்கோட்டில் 2.5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

வியாழக்கிழமை பகலில் கொடநாட்டில் 16 மி.மீ., கிளன்மாா்கனில் 15, கீழ்கோத்தகிரியில் 12, நடுவட்டத்தில் 11.5, உலிக்கலில் 10, கோத்தகிரியில் 9, கேத்தியில் 5, மசினகுடியில் 4, குன்னூரில் 3.5, எடப்பள்ளி, உதகையில் தலா 3, மேல்குன்னூரில் 1.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com