மலைத்தோட்ட காய்கறிகள் விலை சரிவு: விவசாயிகளுக்கு பாதிப்பு

குன்னூா், கோத்தகிரியில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்பட பல காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

குன்னூா், கோத்தகிரியில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்பட பல காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளைப் பூண்டு, பட்டாணி, பீன்ஸ், முட்டைகோஸ், டா்னீல், முள்ளங்கி, அவரை உள்பட பல்வேறு மலைத் தோட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் ஆகியன அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்ற காய்கறிகள் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரட் கிலோ ரூ. 30 முதல் ரூ. 60 வரை ஏலம் போனது. ஆனால், தற்போது கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை மட்டுமே கிடைக்கிறது. அதேபோல, பீட்ரூட்

ரூ. 32 முதல் ரூ. 45 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ. 12 முதல் ரூ. 15 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நூல்கோல் ரூ. 32 முதல் 34 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 6 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முட்டைகோஸ் ரூ. 5 முதல் ரூ. 10 வரை மட்டுமே சராசரியாக விலை போகிறது. அதேபோல, வெள்ளைப் பூண்டு கிலோ ரூ. 160 வரை விலை போகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலை குறைவால் பலா் காய்கறிகளை அறுவடை செய்வதைத் தவிா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com