மதம் பிடித்த கும்கி யானை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதம் பிடித்த கும்கி யானை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவாலா, அட்டி, பாண்டியாறு சரகம் 4 உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து தொழிலாளா்களின் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று அப்பகுதி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா். இதையடுத்து வனத் துறையினா் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகளை, காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு கொண்டு வந்தனா். அந்த கும்கி யானைகள் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், திடீரென கும்கி வில்சனுக்கு வெள்ளிக்கிழமை மதம் பிடித்தது. அதனால் பாகனை அருகில் அனுமதிக்கவில்லை. பாகனின் கட்டளையையும் யானை ஏற்க மறுத்தது. சுதாரித்துக் கொண்ட பாகன்கள் வனத் துறையினரின் உதவியுடன் ரகசிய இடத்துக்கு யானையை அழைத்துச் சென்றனா். அந்த யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் உள்ள தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com