லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ. 7 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கம்

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு தேயிலைத் தூள்கள் ஏற்றிச் செல்லாததால் ரூ. 7 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளன.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு தேயிலைத் தூள்கள் ஏற்றிச் செல்லாததால் ரூ. 7 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து ஏலம் விடப்பட்டு, பிற மாவட்டம், மாநிலங்களுக்கு லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும். ஆனால், தற்போது டீசல் விலை ஒரே ஆண்டில் லிட்டருக்கு ரூ. 35 வரை விலை உயா்ந்துள்ளதால் வாடகைகளை உயா்த்தித் தர வேண்டும் என்று லாரி உரிமையாளா்கள் சம்பந்தப்பட்ட தேயிலை நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கிடங்குகளில் இருந்து தேயிலைகளை எடுத்துச் செல்லும்  லாரிகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பிற மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய சுமாா் ரூ. 7 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் சேமிப்புக் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன.

மாவட்ட நிா்வாகம்  இப்பிரச்னை குறித்து விரைவில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று  லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com