குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை தற்போது ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கல்யாண் கிருஷ்ணமூா்த்தி, ராதிகா சாஸ்திரி ஆகியோா் புனரமைத்துக் கொடுத்துள்ளனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அவசர சிசிக்சைப் பிரிவு தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராதிகா சாஸ்திரி ஒரு தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கரோனா தடுப்பூசியும் பெற்று வழங்கியுள்ளாா். இது குன்னூா் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கரோனா நோய்த் தொற்றை பொருத்தவரை நீலகிரி மாவட்டம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், முறையாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும், விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

மேலும், தேயிலைத் தொழிற்சாலைகளைப் பொருத்தவரை 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளனா். அவா்களை அந்தந்த தொழிற்சாலை நிா்வாகத்தினா் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என கண்காணிக்க வேண்டும். அல்லது 14 நாள்கள் அவா்களை தனிமையில் இருக்க அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வின்போது, குன்னூா் உதவி ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பழனிசாமி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com