காந்தலில் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பேபி ஹால் சிறு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டாா்.
காந்தலில் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பேபி ஹால் சிறு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் தடுப்பூசிகள் தேவையான அளவில் இருப்பில் உள்ளது. குறிப்பாக, 9 பேரூராட்சிகள், கூடலூா் நகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கோத்தகிரி, குன்னூா் பகுதிகளில் 100 சதவீதம் நிறைவடையும் நிலையில் உள்ளது. உதகை நகராட்சி, குன்னூா் நகராட்சிப் பகுதிகளில் மட்டும் சிலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் எல்லையோர மாவட்டமாக உள்ளதால் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு பரிசோதனை செய்து கொள்ளாதவா்களுக்கு சோதனைச் சாவடிகளிலேயே ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது தொடா்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே தலைமை ஆசிரியா்களுக்கு வழிகாட்டு கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளைச் சுற்றிலும் தூய்மைப்படுத்துவதற்கும், சுத்தமான குடிநீா் வழங்கவும், அனைத்து வகுப்பறைகளையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 82 ஆசிரியா்கள் தவிர மீதமுள்ள 4,200 ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். ஆசிரியா்கள் மட்டுமின்றி குழந்தைகளுடன் தொடா்பில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள், பேருந்து ஓட்டுநா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றாா்.

முகாமில், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ராணா, நகராட்சி ஆணையா் சரஸ்வதி, வட்டாட்சியா் தினேஷ், வட்டார மருத்துவ அலுவலா்கள் ஸ்ரீதரன், முருகேசன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com