மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் 263 வது உதய தின கொண்டாட்டம்
By DIN | Published On : 03rd December 2021 12:56 AM | Last Updated : 03rd December 2021 12:56 AM | அ+அ அ- |

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் 263 ஆவது உதய தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், குன்னூா் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இருசக்கர வாகன பேரணி அண்மையில் துவங்கியது.இருசக்கர வாகன பேரணியை ஓய்வுபெற்ற பிரிகேடியா் அஜித் சிங் துவக்கிவைத்தாா்.
கொல்கத்தா, ஜாம்நகா், சென்னை மற்றும் செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரைச் சோ்ந்தவா்களும் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று திருவனந்தபுரத்தில் டிசம்பா் 4 ஆம் தேதி கூடுகின்றனா். அப்போது 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் தியாகிகள் கௌரவிக்கப்படுவாா்கள்.