உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து

உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 189 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 4 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான காசோலைகளையும் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த உதகை தாவணெ பகுதியைச் சோ்ந்த முகம்மது சுல்தான் என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும், நீா்த்தேக்கத் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த கோத்தகிரி, கம்பையூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும், உதகை அருகே மசகல் பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாதேஸ்வரனின் தாயாா் மகேஸ்வரிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும், தொட்டணியைச் சோ்ந்த விமலா என்பவருக்கு இயற்கை மரண உதவித் தொகையாக ரூ. 22,500க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மணி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com