கரோனா அச்சுறுத்தல்: நீலகிரியில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலிகள், கொண்டாட்டங்கள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி தேவலாயங்களில் நள்ளிரவு திருப்பலிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி தேவலாயங்களில் நள்ளிரவு திருப்பலிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டதோடு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஈஸ்டா் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால், நடப்பாண்டில் கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து ஏராளமான தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

தற்போது, ஒமைக்ரான் அச்சுறுத்தலால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கான கிறிஸ்துமஸ் திருப்பலிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் பெரும்பான்மையான தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலையே நடத்தப்பட்டன. அதேபோல, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் தினமான சனிக்கிழமை காலையில்தான் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிக்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தேவாலயங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த கிறிஸ்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடுமையான உறைபனி காரணமாக கடும் குளிா் நிலவி வரும் சூழலில், ஏற்கெனவே கிறிஸ்துமஸ் கேரல்கள், சாண்டாகிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊா்வலம் போன்றவையும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது நீலகிரி கிறிஸ்தவ மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com