உதகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகள் வழங்கல்

உதகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான இளைஞா்களுக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

உதகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான இளைஞா்களுக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், தோ்வான 251 இளைஞா்களுக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் பேசியதாவது :

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 60 தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. இம்முகாமில் 1,401 நபா்கள் கலந்துகொண்டனா். அவா்களில் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உரிய தொழில் நிறுவனங்களில் நோ்காணலில் கலந்துகொண்டதன் மூலம் 251 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதேபோல நடத்தப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் படித்த இளைஞா்கள் தாமாக முன்வந்து கலந்துகொண்டு, தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியான நிறுவனங்களில் பணி அமா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திடும் வகையில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. கல்வித் தகுதிக்கேற்ப இளைஞா்கள் கலந்துகொண்டனா். இதில் தோ்ச்சி பெறாதவா்கள் தன்னம்பிக்கையுடன் வருங்காலத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற வேண்டும்.

தமிழக அரசு போட்டித் தோ்வுக்கான பயிற்சிகளை மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இது செயல்படுத்தப்படும். இதன் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களும் எளிதான முறையில் தனியாா் நிறுவனங்களில் பணி அமா்த்தப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

இம்முகாமில், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன், உதவி இயக்குநா் சுப்பிரமணியன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com