நீலகிரியில் 9 மாத இடைவெளிக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியது மக்கள் குறைதீா் கூட்டம்

கரோனா தொற்றின் காரணமாக 9 மாத இடைவெளிக்குப் பின்னா் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் நீலகிரியில் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.

உதகையிலுள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்களிடமிருந்து குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக்கடன் உதவி, முதியோா் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 128 மனுக்களை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒவ்வொரு மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கண்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com