நீலகிரியில் இணையதளத்தில் பதிவு செய்த 80% பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா்

கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி மாதம் 16ஆம்தேதி துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இதில், முன்களப் பணியாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்த 4,825 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 80 சதவீத நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் முன்களப் பணியாளா்களாக உள்ள பிற துறைகளில் பணியாற்றுபவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com