எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்
By DIN | Published On : 06th February 2021 10:01 PM | Last Updated : 06th February 2021 10:01 PM | அ+அ அ- |

எரிவாயு உருளை வெடித்ததில் சேதமடைந்த வீடு.
கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள மண்வயல் பகுதியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எரிவாயு உருளை வெடித்ததில் வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட மண்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோய். இவா் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வீட்டில் யாரும் இல்லை. அப்போது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளை திடீரனெ வெடித்து சிதறியதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது வீடு முற்றிலும் சிதைந்திருந்தது. ஜோய் உள்பட யாரும் வீட்டில் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.