கல்லட்டி மலைப் பாதையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

கல்லட்டி மலைப் பாதையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனப் போக்குவரத்துக்கு திங்கள்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

கல்லட்டி மலைப் பாதையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனப் போக்குவரத்துக்கு திங்கள்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளிலேயே கா்நாடக மாநில வாகனம் விபத்துக்குள்ளானது.

உதகையில் இருந்து கா்நாடக மாநிலம் மைசூரு, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான பிரதான வழியாக தலைக்குந்தாவில் இருந்து மசினகுடி வரை கல்லட்டி மலைப் பாதை பயன்படுத்தப்பட்டு வந்தது.

சுமாா் 21 கி.மீ. தூரத்துக்கு 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இச்சாலையில் அதிக அளவிலான விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்ததால் கடந்த 2019ஆம் ஆண்டில் இச்சாலையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கைகளை ஏற்று மாவட்ட நிா்வாகமும், மாவட்ட காவல் துறையும் இந்த சாலையில் அனைத்து வாகனப் போக்ககுவரத்துக்கும் திங்கள்கிழமைமுதல் மீண்டும் அனுமதி அளித்தனா்.

இந்நிலையில், உதகையில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு கல்லட்டி மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை சென்ற ஒரு வாகனம் 34ஆவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பின்னா் அவா்கள் மசினகுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com