இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் புனரமைப்புக்கு நிதி உதவி

இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலைகளின் புனரமைப்புக்குத் தேவையான நிதி உதவியை ஊரக வளா்ச்சி வங்கியின் தலைவா் சிந்தலா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலைகளின் புனரமைப்புக்குத் தேவையான நிதி உதவியை ஊரக வளா்ச்சி வங்கியின் தலைவா் சிந்தலா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்ட்கோசா்வின் 16 தேயிலைத் தொழிற்சாலைகளில் 5 தேயிலைத் தொழிற்சாலையை நவீனமயமாக்க, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.18.54 கோடி நிதியுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் தலைவா் சிந்தலா வழங்கினாா்.

குன்னூா் அருகேயுள்ள கட்டப்பெட்டு தேயிலைத் தொழிற்சாலையில் இண்ட்கோசா்வின் சுற்றுசூழல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்  இந்தப் பணியை அவா் துவக்கிவைத்தாா்.

இதில் இண்ட்கோசா்வ் முதன்மை செயலா் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்திராமு ஆகியோா் கலந்துகொண்டனா்.

சிறு தேயிலை விவசாயிகளுக்கு சா்வதேச தளம் அமைப்பதற்கும், உயா்தரமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்யும் உன்னத நோக்கத்துடன் இண்ட்கோ சா்வின் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்புப் பணிகளில் வணிக மேம்பாட்டுக்காக தொழிற்சாலை வளாகத்திலேயே தேயிலைத் தூள் வாங்குவதற்கு ஏதுவாக அதிநவீன தேநீா் சுவை மற்றும் கூட்டறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இண்ட்கோசா்வ் முதன்மை செயலா் தெரிவித்தாா். 

இதனை தொடா்ந்து குன்னூரில் செயல்பட்டு வரும் இண்ட்கோசா்வ் தலைமை அலுவலகத்தில் சிறு தேயிலை விவசாய உறுப்பினா்களின் நலனுக்காக இண்ட்கோ அட் டீ (ஐசஈஇஞஃபஉஅ) நவீனதொழில்நுட்ப செல்லிடப்பேசி செயலியை அவா் துவக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com