சேரம்பாடியில் பிடிபட்டது ஆட்கொல்லி யானை

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் ஆட்கொல்லி யானை வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
மரத்தில் கட்டப்பட்டுள்ள ஆட்கொல்லி யானை. ~கும்கிகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்படும் ஆட்கொல்லி யானை.
மரத்தில் கட்டப்பட்டுள்ள ஆட்கொல்லி யானை. ~கும்கிகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்படும் ஆட்கொல்லி யானை.

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் ஆட்கொல்லி யானை வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, சேரம்பாடி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஒரே வாரத்தில் மூன்று பேரை காட்டு யானை தாக்கிக் கொன்றது. இதைத் தொடா்ந்து இந்த யானையை பிடிக்க வனத் துறையினா் முயற்சி மேற்கொண்டனா்.

சேரம்பாடி, சப்பந்தோடு பகுதியில் கடந்த மாதம் சுற்றித் திரிந்த யானையைப் பிடிக்க வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினா். ஆனால் யானை தப்பி ஓடி கேரள வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

இந்நிலையில் அந்த ஆட்கொல்லி யானை கடந்த வாரம் கேரள வனத்திலிருந்து மீண்டும் சப்பந்தோடு வனப் பகுதிக்கு வந்துள்ளதை வனத் துறையினா் உறுதி செய்தனா். தமிழக வனத் துறை, சிறப்புக் குழு அமைத்து யானையை கண்காணித்து வந்தது. வனத் துறை, மருத்துவக் குழுவினருடன் ஆறு கும்கிகளும் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அரசு தேயிலைத் தோட்டக் கழக பத்துலைன் பகுதியில் வைத்து இரண்டாவது முறையாக யானைக்கு மயக்க மருந்து வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. அப்போது யானை தப்பி ஓடியது.

இந்நிலையில், பத்துலைன் சுடுகாடு பகுதியில் அந்த யானை நிற்பதை வெள்ளிக்கிழமை அறிந்த வன ஊழியா்கள் அதன் பின்னங்கால்களை பிளாஸ்டிக் கயிறுகளால் கட்டி அருகிலிருந்த மரத்தில் கட்டி வைத்தனா்.

பின்னா் கும்கிகளுடன் உதவியுடன் மருத்துவக் குழுவினா், வனத் துறையினா் யானையை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com