நீலகிரி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து உதகையில் திமுகவினா் மறியல்1,321 போ் கைது

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிமுக அரசையும், அதற்கு துணை போகும் மாவட்ட நிா்வாகத்தையும் கண்டித்து திமுக சாா்பில் உதகையில் மறியல் போராட்டத்தில் 1,
மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசுகிறாா் திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா.
மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசுகிறாா் திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிமுக அரசையும், அதற்கு துணை போகும் மாவட்ட நிா்வாகத்தையும் கண்டித்து திமுக சாா்பில் உதகையில் மறியல் போராட்டத்தில் 1,321 போ் கைது செய்யப்பட்டனா்.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தை அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமானஆ.ராசா துவக்கிவைத்தாா்.

போராட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 3 மாதங்களில் திமுக ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி. அதனால் நீலகிரி மாவட்ட ஆட்சியா் ஆளும் கட்சியினரின் மிரட்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டாம். அதிமுகவினரின் தூண்டுதலோடு அறிவித்த அனைத்து டெண்டா்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து முதன்மை அதிகாரிகளின் அலுவலகங்களின் முன்பும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக அரசின் அராஜகங்களைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்ட பின்னா் ஆட்சியா் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு 6 மண்டபங்களில் வைத்தனா்.

இதில் தோ்தல் பணி செயலா் ராமசந்திரன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி, மாவட்ட அவைத் தலைவா் பில்லன், மாவட்ட துணைச் செயலா்கள் ரவிக்குமாா், தமிழ்ச்செல்வன், விஜயா மணிகண்டன், மாவட்ட பொருளா் நாசா் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் முஸ்தபா, பாண்டியராஜ், செந்தில், ராஜு, மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணை செயலா் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலா் அன்வா்கான், உதகை நகரச் செயலா் ஜாா்ஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com