தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்:205 பேருக்கு பனி நியமன ஆணை

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழக ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடத்துதப்பட்ட தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாமில் 205 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
உதகை அரசு கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.

உதகை: நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழக ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடத்துதப்பட்ட தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாமில் 205 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழக ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவை இணைந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றன.

உதகையில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, சேலம், திருப்பூா் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 41 நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய வந்திருந்தன. இந்த முகாமில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 1,150 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 205 மனுதாரா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல, இம்முகாமில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் முகாம் பதிவு மற்றும் திறன் பயிற்சிக்கும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்புக்காக இதுவரை 55,976 நபா்கள் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வடிவேல், பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலா் கஸ்தூரி, உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி, மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக பேராசிரியா் வாசுகி, உதகை அரசு கலைக்கல்லூரி பேரசிரியா்கள் பாலசுப்பிரமணியம், எபினேசா், மகளிா் திட்ட உதவி அலுவலா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com