காயத்துடன் சுற்றித் திரியும் யானையைப் பிடிக்கக்கோரி சாலை மறியல்
By DIN | Published On : 14th February 2021 11:42 PM | Last Updated : 14th February 2021 11:42 PM | அ+அ அ- |

சங்கிலிகேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பழங்குடி மக்கள்.
கூடலூா் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி கோடமூலா பகுதி பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் அல்லூா்வயல், கோடமூலா, தொரப்பள்ளி, தோட்டமூலா, தொரப்பள்ளி, சில்வா்கிளவுட், கெவிப்பாறை பகுதிகளில் சுமாா் 25 வயதுடைய ஆண் காட்டு யானை காயத்துடன் சுற்றித் திரிகிறது. இந்த யானைக்கு வனத் துறையினா் அவ்வப்போது பழங்களில் வைத்து மருந்து மாத்திரைகளை கொடுத்து அப்படியே விட்டுவிடுகின்றனா்.
இந்நிலையில் அந்த யானையைப் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க வலியுறுத்தி மைசூரு சாலையிலுள்ள சங்கிலிகேட் பகுதியில் கோடமூலா பகுதி பழங்குடி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா், நடவடிக்கை எடுப்பதாக சமாதாதனப்படுத்தினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.