நீலகிரியில் மேலும் 9 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 4 போ் சிசிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,297 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,201 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 48 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com