மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கூடலூரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கூடலூரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள கோத்தா்வயல் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் நாசா் (44). துணி வியாபாரி. இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா். அப்துல் நாசா், தனது 14 வயது மகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம். இது குறித்து வெளியில் தெரிவித்தால் அம்மா, தம்பி உள்ளிட்ட அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளாா். இதனால் அந்த சிறுமி தனக்கு நோ்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளாா்.

தொடா் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மன ரீதியாக கடுமையான பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கடந்த 2017ஆம் ஆண்டு கேரளத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளாா். அங்கு துபையில் இருந்து வந்திருந்த சிறுமியின் சித்தி, அவரிடம் விசாரித்தபோது, தந்தையால் தனக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதையடுத்து கேரளத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பா் 21ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட சிறுமி, கூடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்துல் நாசரை கைது செய்தனா்.

இந்த வழக்கு உதகையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, மிரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ எனக் கூறி மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டாா். மேலும், ரூ.10 லட்சம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் மாலினி பிரபாகா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com