மசினகுடி, முதுமலையில் ஆட்சியா் ஆய்வு

உதகை அருகே உள்ள மசினகுடி, முதுமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
குனியல் கிராமத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்கும் திட்டத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
குனியல் கிராமத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்கும் திட்டத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகை அருகே உள்ள மசினகுடி, முதுமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மசினகுடி, முதுமலை ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 2.28 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தாா்.

மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட மாவனல்லா பகுதியில் ரூ. 7.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தையும், மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் கல்லட்டி - தெப்பக்காடு சாலை முதல் ஆச்சக்கரை வரை ரூ. 28 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலையையும், மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட தேக்குபாடி பகுதியில் பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ. 1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 55 வீடுகளையும், ஆவாஷ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 வீடுகளும் என மொத்தம் ரூ. 2.15 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்ததோடு, நடைபெற்று வரும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, முதுமலை ஊராட்சிக்கு உள்பட்ட குனியல் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ. 13.42 லட்சம் மதிப்பில் 45 வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்கும் பணியையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி, செயற்பொறியாளா் சுஜாதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com