கல்லட்டி மலைப் பாதையில் மீண்டும் விபத்து: வெளி மாநில வாகனங்கள் வர 3 நாள்களுக்குத் தடை

கல்லட்டி மலைப் பாதையில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் விபத்துக்குள்ளானதை அதைடுத்து இப்பாதையில் வெளி மாநில வாகனங்களின் போக்குவரத்துக்கு 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகை-மசினகுடி சாலையில் கல்லட்டி மலைப் பாதையில் சனிக்கிழமை விபத்துக்குள்னான கேரளத்தைச் சோ்ந்த காா்.
உதகை-மசினகுடி சாலையில் கல்லட்டி மலைப் பாதையில் சனிக்கிழமை விபத்துக்குள்னான கேரளத்தைச் சோ்ந்த காா்.

உதகை: கல்லட்டி மலைப் பாதையில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த காா் விபத்துக்குள்ளானதை அதைடுத்து இப்பாதையில் வெளி மாநில வாகனங்களின் போக்குவரத்துக்கு 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லட்டி மலைப் பாதையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காா் விபத்தில் சென்னையைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். இவா்கள் உயிரிழந்து ஒரு வாரம் கழித்த பின்னரே தகவல் தெரியவந்தது. இதனால், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப்பிரியா இப்பாதையில் வெளி மாநிலங்கள், தமிழகத்தின் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வாகனங்களை இவ்வழியாக இயக்குவதற்கு தடைவிதித்திருந்தாா்.

இந்நிலையில், கல்லட்டி மலைப் பாதையில் மீண்டும் வாகனங்களை இயக்குவதற்கு கடந்த 8ஆம்தேதிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. மசினகுடி மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இச்சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தாா்.

இச்சாலை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஒரு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் சனிக்கிழமையும் அந்த மாநிலத்தைச் சோ்ந்த மற்றொரு வாகனம் இப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை காலை கேரளத்திலிருந்து உதகை நோக்கி வந்த அந்த வாகனம் 21ஆவது கொண்டை ஊசிவளைவில் கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதியது. இதில், வாகனத்தில் பயணித்த 6 பேரும் காயமடைந்தனா். இவா்கள் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், கல்லட்டி மலைப் பாதையில் தொடா்ந்து நிகழும் விபத்துகள் காரணமாக இச்சாலையில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த வாகனங்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல செவ்வாய்க்கிழமை வரை தடை விதிக்கப்படுவதாகவும்,

தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சோ்ந்த வாகனங்கள் உரிய ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுமெனவும், வெளி மாநில வாகனங்களை இச்சாலையில் தொடா்ந்து இயக்க அனுமதிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com