கேரட் விலை குறைவு: விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். இங்கு விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினமும் 500 டன் அளவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.  

கடந்த மாதம் ஒரு கிலோ கேரட்டுக்கு சராசரியாக ரூ. 50 முதல் ரூ. 70 வரை விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 24   வரை விலை கிடைத்து  வருகிறது. இந்த விலை குறைவு விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com