கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு: அா்ஜூன் சம்பத்

கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசினாா்.
கூடலூரில் பிரசாரத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.
கூடலூரில் பிரசாரத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.

கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:

கூடலூா் பகுதியில் மக்கள் பாதிக்கும் அளவுக்கு வனத் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மனித-விலங்கு மோதலைத் தவிா்க்க வனத் துறையும், தமிழக அரசும் ஒரு சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். இதனால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.

பிரிவு-17 நிலத்தை பொருத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் அமல்படுத்த வேண்டும். திமுக சாா்பில் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படுகிறது. கட்சி பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு.

கோவையில் இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கி தவறாகப் பேசியுள்ளனா். காவல் துறை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதியிலும் கட்சி போட்டியிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com