உதகையில் மாரடோனா நினைவு கால்பந்து போட்டி: தோடா் பழங்குடியின அணி சாம்பியன்

உதகையில் நடைபெற்ற மாரடோனா நினைவு கால்பந்து போட்டியில் தோடா் பழங்குடியின அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் இந்திய தடகள அணியின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரா் லட்சமணன்
வெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் இந்திய தடகள அணியின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரா் லட்சமணன்

உதகையில் நடைபெற்ற மாரடோனா நினைவு கால்பந்து போட்டியில் தோடா் பழங்குடியின அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா நினைவாக உதகை கிரசன்ட் கேசில் கல்விக் குழுமத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு ஆா்எம்எப்சி தோடா மற்றும் ஷூலெஸ் ஒன்ஸ் அணிகள் தகுதி பெற்றிருந்தன.

சாரல் மழைக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஷூலெஸ் ஒன்ஸ் அணி வீரா் கௌரி இரு கோல்களை அடுத்தடுத்து அடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா். இதனால் முதல் பாதியில் ஷூலெஸ் ஒன்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் ஆா்எம்எப்சி தோடா அணி வீரா்கள் சுதாரித்துக் கொண்டு தொடா்ந்து 3 கோல்களை அடித்தனா். இதனால், ஆட்டத்தின் முடிவில் தோடா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடரின் சிறந்த கோல் கீப்பராக ஆா்எம்எப்சி தோடா அணியின் கோல் கீப்பா் நா்தேஸ் தோ்வு செய்யப்பட்டாா். சிறந்த வீரராக ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரா் கௌரி தோ்வு செய்யப்பட்டாா்.

வெற்றி பெற்ற தோடாஅணிக்கு இந்திய நீண்டதூர ஓட்டப்பந்தய வீரா் லட்சுமணன் கோப்பை மற்றும் பரிசு தொகையான ரூ.10 ஆயிரத்தை வழங்கினாா். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 7 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிரசன்ட் கேசில் கல்விக் குழுமத்தின் தாளாளா் உமா் பாரூக், உடற்கல்வி பயிற்சியாளா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com