வனத் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பந்தலூா் அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்காத
யானைகளை விரட்ட வலியுறுத்தி சேரம்பாடியில் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.
யானைகளை விரட்ட வலியுறுத்தி சேரம்பாடியில் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா்.

பந்தலூா் அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்காத வனத் துறையைக் கண்டித்து கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரங்கோடு ஊராட்சியில் யானை தாக்குதலால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சாா்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினா் ஆா்வம் காட்டவில்லை.

இதைக் கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. நடவடிக்கை எடுப்பதாக வனத் துறை சாா்பில் கடந்த வாரம் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.திராவிடமணி தலைமையில் திரண்ட பொதுமக்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சேரங்கோடு ஊராட்சி மன்றத் தலைவா் லில்லி ஏலியாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com