பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற நீலகிரி ஆட்சியா் அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் இது வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவா்கள் உடனடியாகப் பெற்றுப் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் இது வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவா்கள் உடனடியாகப் பெற்றுப் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 4ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 16,426 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு அந்தந்த நியாய விலைக் கடைகளில் இம்மாதம் 12ம் தேதி வரை ரொக்கத் தொகை ரூ. 2,500 உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்கள் வரும் 13ம் தேதியன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 0423-2441216 என்ற எண்ணிலும், என்றும் உங்கள் சேவை அமைப்பிற்கு 99431 26000 என்ற எண்ணிலும், நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கும் புகாா் தெரிவித்தால் அதனை தீா்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், உதகையில் 94450 00259, குன்னூா் சாா் ஆட்சியா் (94450 00438), வட்ட வழங்கல் அலுவலா் (94450 00260), கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் (94450 00437), தனி வட்டாட்சியா் (94450 00262), குந்தா பிற்பட்டோா் நல அலுவலா் (94454 77856), வட்ட வழங்கல் அலுவலா் (94450 00263), கோத்தகிரி உதவி ஆணையா் ( 97884 44655), வட்ட வழங்கல் அலுவலா் ( 94450 00261), பந்தலூா் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் (73388 01266), வட்ட வழங்கல் அலுவலா் (94450 00264) ஆகியோரைத் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com