குன்னூரில் குளிா்காய தீ மூட்டியதில் மூச்சுத் திணறி பெண் பலி

குன்னூா், அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிா் காய்ந்து உறங்கியபோது வெளியேறிய புகையால் மூச்சுத் திணறி பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

குன்னூா், அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிா் காய்ந்து உறங்கியபோது வெளியேறிய புகையால் மூச்சுத் திணறி பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், அம்பிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கலாவதி (55). இவரது மகன் மகேந்திரன் (30). கலாவதி கணவரின் சகோதரா் கஜபதி (60). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு குளிா் அதிகமாக இருந்ததால் அடுப்புக்கரியில் தீ மூட்டி குளிா் காய்ந்து கொண்டிருந்தனா். பின்னா் மூவரும் உறங்கச் சென்றுள்ளனா். காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது மூவரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவா்களை மீட்டு குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில், கலாவதி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

முதற்கட்டவிசாரணையில், அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் கலாவதி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது

தெரியவந்தது. கஜபதி, மகேந்திரன் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதைத் தவிர கடும் குளிரின் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 2 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com