நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒரே நாளில் 7 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,078 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், குணமடைந்து 7,951 போ் வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 47 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.